கோலாலம்பூர், ஆகஸ்ட்.04-
இரண்டு வருட கால இடைவெளிக்குப் பிறகு கடந்த ஜுலை மாதம் முதல் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தொடங்கிய ஏரோ டிரேன் சேவை, இந்த ஒரு மாத காலத்தில் இரண்டு முறை கோளாறு ஏற்பட்டு சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆகக் கடைசியாக மீண்டும் ஏரோ டிரேன் சேவையில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் விமான நிலையத்தை வழிநடத்தி வரும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
456 மில்லியன் ரிங்கிட் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள ஏரோ டிரேன் சேவை, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் செயல்பட இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.








