ஜோகூர் பாரு, ஜனவரி.09-
கடந்த டிசம்பர் மாதம் ஜோகூர், பாசீர் கூடாங்கில் 7 வயது சிறுவனைக் கொலை செய்ததாக மாது ஒருவர், ஜோகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
55 வயது சானியா ஒஸ்மான் என்ற அந்த மாது மாஜிஸ்திரேட் நபிலா நிஸான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பாசீர் கூடாங், தாமான் கோத்தா மாசாயில் உள்ள வீடொன்றின் பிரதான வரவேற்பு அறையில் முஹமட் அஸ்வாட் முஹமட் என்ற சிறுவனைக் கொலை செய்ததாக அந்த மாதுவிற்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த மாது குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








