Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணை புதைத்து ஓராண்டு காலம் ஆகலாம்
தற்போதைய செய்திகள்

பெண்ணை புதைத்து ஓராண்டு காலம் ஆகலாம்

Share:

கிள்ளான், கம்போங் பென்டாமாரில் உள்ள ஒரு வாடகை வீட்டு குளியல் அறையில் ஒரு பெண்ணின் சடலம், சிமிந்திக்குள் சுமார் ஒரு அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட சம்பவத்தில் அந்தப் பெண் ஓராண்டுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

குளியல் அறையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உடல் அவயங்கள் தொடர்பில் போலீசாரின் விசாரணை தொடர்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் இருவர் இன்னமும் தேடப்பட்டு வரும் வேளையில் பிடிபட்டுள்ள ஒரு நபர் தந்த வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக டத்தோ ஹுசெயின் ஓமார் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தற்போது சடலம் ஷா ஆலாம் மருத்துவமனையின் சவக்கிடங்கில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News