Jul 30, 2026
Thisaigal NewsYouTube
இஸ்லாமியர்கள் அறிக்கைகளை வெளியிடும் போது கவனம் அவசியம் – MAIS
தற்போதைய செய்திகள்

இஸ்லாமியர்கள் அறிக்கைகளை வெளியிடும் போது கவனம் அவசியம் – MAIS

Share:

சிலாங்கூர்,ஆ௧ஸ்ட் 04-

இஸ்லாமிய போதனைகளைப் போலவே இந்து மதத்தின் போதனைகளும் உள்ளது என்று வெளியிடப்பட்ட கூற்றை சிலாங்கூர் இஸ்லாமிய மத மன்றத் தலைவர் TAN SRI ABDUL AZIZ MOHD YUSOF மறுத்துள்ளார்.

இனப் பிரச்சனைகள் சார்ந்த எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன், மாநில இஸ்லாமிய அதிகாரிகள் குறிப்பாக, MUFTI துறையிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று இஸ்லாமியர்களுக்குச் சிலாங்கூர் இஸ்லாமிய மத மன்றம் வலியுறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, இஸ்லாமியர்களுக்கு ஏற்படும் தவறான புரிதல்களைத் தவிர்க்கவும்; பல்லின மக்களும் அமைதியான சூழலில் வாழ்வதை உறுதி செய்யவும் அந்நடவடிக்கை அவசியம் என்று சிலாங்கூர் இஸ்லாமிய மத மன்றத் தலைவர் TAN SRI ABDUL AZIZ MOHD YUSOF தெலிவுப்படுத்தினார்.

இன விவகாரத்தில் முழுமையான தெளிவில்லாமல் அத்தகைய கூற்றை வெளியிடுவதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று, KSL ESPLANADE ஹோட்டலில், 2024 RIQAB விடுதலை மாதப் பிரச்சாரத்திற்குப் பின், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

முன்னதாக, பேராக் இஸ்லாம் மதத் துறை ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலத்திற்குச் செல்லும் சுற்றுலா குறித்த காணொலியும்; அதன் பங்கேற்பாளர் ஒருவர் வெளியிட்ட கூற்றும் மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை