கோலாலம்பூர், செப்டம்பர்.17-
நாடு முழுவதும் RON97 இரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.21 ரிங்கிட் ஆக உயர்த்தப்படும் என்றும், தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 2.93 ரிங்கிட்டாக உயர்த்தப்படும் என்றும் நிதியமைச்சு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதே வேளையில், சபா, சரவாக் மற்றும் லபுவானில் டீசலின் விலை லிட்டருக்கு 2.15 ரிங்கிட்டாகவே தொடரும் என்றும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் RON95 இரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு 2.05 ரிங்கிட்டிலேயே நிலைத்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய விலை செப்டம்பர் 18 முதல் 24 வரை அமல்படுத்தப்படும் என்றும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.








