Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கேமரன்மலை சாலையில் நிலச்சரிவு
தற்போதைய செய்திகள்

கேமரன்மலை சாலையில் நிலச்சரிவு

Share:

கேமரன்மலை சாலையில் சிம்பாங் புலாய்க்கும், புலு வேலிக்கும் இடையில் கனத்த மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. . நேற்று இரவு 11.25 மணியளவில்(FT) 185 செக்‌ஷன் 45 இல் இந்த நிலச்சரிவு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது வரையில் தாங்கள் மேற்கொண்ட சோதனையில் இந்த நிலச்சரிவு சம்பவத்தில் எந்தவொரு வாகனமும் சிக்கவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக பேரா மாநில தொடர்புத்துறை கட்டமைப்பு, எரிசக்தி, நீரவளம் மற்றும் போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ செரி மொஹமாட் நிசார் ஜலாலுடின் தெரிவித்துள்ளார்.

கனத்த மழையின் காரணமாக மலையில் வழிந்தோடிய நீரின் வேகத்தினால் இந்த நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டு இருந்த அந்த சாலை இன்று அதிகாலை 4.45 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக மொஹமாட் நிசார் தெரிவித்துள்ளார்.

Related News