Sep 29, 2026
Thisaigal NewsYouTube
ரிதுவான் டீ மீது நடவடிக்கை கோரி ராயர் போலீசில்  புகார்
தற்போதைய செய்திகள்

ரிதுவான் டீ மீது நடவடிக்கை கோரி ராயர் போலீசில் புகார்

Share:

சமயப் போதகர் ரிதுவான் டீ அப்துல்லாவுக்கு எதிராக போலீஸ் துறையில் புகார் செய்ததுடன், சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜசெக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் வலியுறுத்தியுள்ளார்.

‘போதும், இனியும் போதும்’ என்று குறிப்பிட்ட ராயர், இது போன்ற கருத்துகள் தொடர்பில் மேலும் எத்தனை போலீஸ் புகார்கள் செய்யப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

வெறுப்பைத் தூண்டும் வகையிலான கருத்துகள் தொடர்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் சமூகங்களுக்கிடையே பிளவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ராயர் கூறினார்.

ரிதுவான் டீயின் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பில் முன்னரும் போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் இனம், மதம் மற்றும் அரச குடும்பம் தொடர்பான 3R விவகாரங்கள் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதிகாரிகள் இது போன்ற விவகாரங்களில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமது கோரிக்கை என்று ராயர் தெரிவித்துள்ளார்.

Related News

ரிதுவான் டீ மீது நடவடிக்கை கோரி ராயர் போலீசில் புகார் | Thisaigal News