Oct 15, 2026
Thisaigal NewsYouTube

தமிழர்களுக்கு இடையே வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள சாத்தியம் உள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தமிழர்களுக்கு இடையே வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள சாத்தியம் உள்ளது

பினாங்கு, ஜன.4-

உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கும் நிறைய தேவைகள் உள்ளன. தமிழர்களுக்குள் நல்லத் தொடர்பை ஏற்படத்திக் கொண்டால் எல்லா விதமான வர்த்தகத்திற்கும் பெரும் பலனை அளிக்கும் என்று தமிழ்நாடு மதுரையை சேர்ந்த Riyaz Ahmad தெரிவித்தார்.

இன்று பினாங்கு, Dewan Sri Penang அரங்கில் தொடங்கியுள்ள பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தலைமையிலான உலகளாவிய தமிழ் வம்சாவளி மாநாட்டு நிகழ்வில் தமது Coirtron Fibresciens நிறுவனம் சார்பாக கண்காட்சியில் பங்கேற்ற அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான Riyaz Ahmad குறிப்பிட்டார்.

இது போன்ற மாநாடுகளில் நமது வழித்தோன்றல்களை சந்தித்து, அவர்கள் தொடர்ந்து தங்களின் பாரம்பரியத்தை இந்த நாட்டில் நிலைநிறுத்திக்கொண்டதை பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்று தமிழ்நாடு டெக்ஸ்டைல்ஸ் துணை இயக்குநர் அம்சவேணி தெரிவித்தார்.

நட்புறவாக பழகும் மலேசிய மக்களை பார்ப்பதிலும், இது போன்ற மாநாட்டில் கலந்து கொண்டதிலும் தங்கள் வர்த்தகங்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று மாநாட்டில் ஒரு பேராளராக கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்ணன் ஆறுமுகம் தெரிவித்தார்.

மாநாட்டின் இரண்டாவது நாளான, நாளை ஜனவரி 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பன்னாட்டு குறு,சிறு,நடுத்ததர தொழில் கூட்டமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

சிறப்பு அழைப்பாளர்களாக தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் மற்றும் முன்னாள் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

தமிழர்களுக்கு இடையே வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள ச... | Thisaigal News