Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கொள்ளைக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கொள்ளைக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், அக்டோபர் 07-

சபா பெர்னாம் வட்டாரத்தில் சீனப்பிரஜைகளை பின்னணியாக கொண்டு, வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் கொள்ளைக்கும்பல் ஒன்றை சிலாங்கூர் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.

இதில் உள்ளூரைச் சேர்ந்த ஓர் ஆடவரும், 7 சீனநாட்டுப்பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஷா ஆலாமில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ உசேன் உமர் கான் குறிப்பிட்டார்.

இந்தக் கும்பல் கடந்த ஜனவரியிலிருந்து செப்டம்பர் மாதம் வரை பல்வேறு கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்கள் இல்லாத இரண்டு மாடிகளைக்கொண்ட தரை வீடுகளை இலக்காக கொண்டு இக்கும்பல் கொள்ளையிட்டு வந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →