May 5, 2026
Thisaigal NewsYouTube
செந்தூல் சாலையில் பெண் சடலமாக மீட்பு: வீடற்றவர் எனச் சந்தேகம்
தற்போதைய செய்திகள்

செந்தூல் சாலையில் பெண் சடலமாக மீட்பு: வீடற்றவர் எனச் சந்தேகம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.09-

இன்று காலையில் கோலாலம்பூர் ஜாலான் செந்தூல் சாலையில் MBS ஆண்கள் இடைநிலைப்பள்ளியின் சமிக்ஞை விளக்கு அருகே பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்தவர் வீடற்றவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மலாய் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, உயிரிழந்தவர் உள்ளூர்வாசி என்றும், அவருக்கு சுமார் 40 முதல் 50 வயது இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அவரது மரணத்திற்கான காரணம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தற்போது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் குறித்த பின்னணி மற்றும் சூழ்நிலைகளை போலீஸ் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Related News