கடந்த 18 ஆண்டுகாலமாக டிஏபி-யில் ஓர் உறுப்பினராக இருந்து வரும் பினாங்கு துணை முதல் அமைச்சரும், முன்னாள் பிறை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் பி.ராமசாமி அக்கட்சியில் இருந்து விலகவிருப்பதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு டிஏபியில் ஓர் உறுப்பினராக தன்னைப் பிணைத்துக் கொண்ட டாக்டர் ராமசாமி, நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை தொடர்ந்து அவர் அக்கட்சியை விட்டு விலகலாம் என்று கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் பிறை சட்டமன்றத் தொகுதியில் ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் மார்ஷல் அலுவலகத்தில் நாளை வியாழக்கிழமை டாக்டர் ராமசாமி ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related News

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது


