குளுவாங், ஜூலை.18-
சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைப் போன்று பொது இடத்தில் ஆபாசச் சேட்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஆடவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை மாலை 4 மணியளவில் ஜோகூர், குளுவாங், ஜாலான் பசாரில் பேரங்காடியின் முன்புறம், அந்த நபரின் செய்கைக் குறித்து போலீஸ் புகார் பெற்றதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.
இதன் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 55 வயதுடைய அந்த நபர், ஜாலான் பெசார் மெர்சிங்கில் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த நபர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்ற போதிலும் குற்றச்செயல் தொடர்பாக இரண்டு பதிவுகளைக் கொண்டு இருப்பதாக பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.








