Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சுடலை மாட சுவாமி ஆலயத்தின் வருடாந்திர திருவிழா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுடலை மாட சுவாமி ஆலயத்தின் வருடாந்திர திருவிழா

பினாங்கு, நவ.11-


பினாங்கு, ஜாலான் கெபுன் ஞோர்– ரில் விற்றிருக்கும் ஓம் ஸ்ரீ மகா மதுரைவீர, சுடலை மாட சுவாமி ஆலயத்தின் 9 ஆம் ஆண்டு பெருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

சக்தி வாய்ந்த ஆலயமாக பக்தர்களால் போற்றப்படும் ஓம் ஸ்ரீ மகா மதுரைவீர, சுடலை மாட சுவாமி ஆலயத்தின் இந்த உற்சவ விழாவில் சமூக நற்காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வரும் வி.வி.எஸ் பிரதர்ஸ் பினாங்கு அன்பர்கள், நண்பர்கள்
மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

ஆலயத்தின் வருடாந்திர உற்சவத்தில் கலந்து, சிறப்பிக்கும் அதேவேளையில் வி.வி.எஸ் பிரதர்ஸ் பினாங்கு நண்பர்கள் மத்தியில் கட்டிக்காக்கப்பட்டு வரும் சகோதரத்துவம் மற்றும் நட்புணர்வை வலுப்படுத்தும் வகையிலும் அவர்களின் இந்த ஒன்றுக்கூடும் நிகழ்வு இவ்வாலயத்தில் நடைபெற்றது.

பினாங்கு தீவில் செயல்பட்டு வரும் வி.வி.எஸ் பிரதர்ஸ் பினாங்கு பல்வேறு சமூக அறப்பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, தொண்டு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

வி.வி.எஸ் பிரதர்ஸ் பினாங்கு அண்பர்களின் வருகையோடும், பக்தபெரும் மக்களின் ஆதரவோடும் வெகுசிறப்பாக நடைபெற்ற இப்பெருவிழாவில் உறுமிமேளம் முழங்க ஓம் ஸ்ரீ மகா மதுரைவீர, சுடலை மாட சுவாமிக்கு தீபாரதனை காட்டப்பட்டது.

இப்பெருவிழாவில் சிலாங்கூர் மாநில மூடா கட்சியின் துணைத் தலைவரும், சமூக ஆர்வலருமான டாக்டர் ஆர். சிவபிரகாஷ் கலந்து சிறப்பித்தார்.

ஆலயத்தின் இந்த உற்சவ விழா, ஒரு வருடாந்திர சமய சடங்காக அர்த்தம் பொதித்த அளவில் நடைபெற்று வருகிறது என்று டாக்டர் சிவபிரகாஷ் வர்ணித்தார். சமய நம்பிக்கை வளரும் அதேவேளையில் நண்பர்கள் மத்தியில் நட்புறவை வலுப்படுத்தும் ஒரு பொருள் பதிந்த விழாவாகவும் பார்க்கப்படுகிறது. இந்த சமய நம்பிக்கையும் ஆழமான நட்பும் இன்னும் பல வருடங்கள் தொடரடப்பட வேண்டும் என்று டாக்டர் சிவபிரகாஷ் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →