Apr 13, 2026
Thisaigal NewsYouTube
லஹாட் டத்துவில் காட்டுயானை தாக்கியதில் 69 வயது முதியவர் பலி
தற்போதைய செய்திகள்

லஹாட் டத்துவில் காட்டுயானை தாக்கியதில் 69 வயது முதியவர் பலி

Share:

நேற்று ஜாலான் துங்கு பகுதியில் உள்ள பெகாஹாக் 2 தோட்டத்தில், காட்டு யானை தாக்கியதில் 69 வயது முதியவர் உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் பாதிக்கப்பட்டவரும், அவரது 38 வயது மகனும், செம்பனைத் தோட்டத்தில் இருந்த போது, திடீரென அங்கு ஒரு காட்டு யானை வந்துள்ளது.

அப்போது, அந்த முதியவர் தனது மகனுடன் சேர்ந்து கதவை மூடி அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, அந்த யானை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அந்த யானையை விரட்டி தனது தந்தையை மீட்க, அவரது மகன் எவ்வளவோ முயற்சித்தும், அது பலனளிக்காமல் போனதாக லஹாட் டத்து மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ஜிம்மி பான்யாவ் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த முதியவர், லஹாட் டத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது, அவர் உயிரிழந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதாகவும் ஜிம்மி பான்யாவ் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மரண தண்டனை தேவையில்லை: அமைச்சர் அந்தோணி லோக் வலியுறுத்து

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு மரண தண்டனை தேவையில்லை: அமைச்சர் அந்தோணி லோக் வலியுறுத்து

சட்டவிரோதமாக சுங்கை கோலோக் ஆற்றைக் கடக்க முயன்ற 34 தாய்லாந்து மாணவர்கள் கைது

சட்டவிரோதமாக சுங்கை கோலோக் ஆற்றைக் கடக்க முயன்ற 34 தாய்லாந்து மாணவர்கள் கைது

எதிர்கட்சித் தலைவருக்கான காலியிடம் குறித்து சபாநாயகருக்கு இன்று அறிவிக்கப்படும்

எதிர்கட்சித் தலைவருக்கான காலியிடம் குறித்து சபாநாயகருக்கு இன்று அறிவிக்கப்படும்

12 ஆயிரம் ரிங்கிட் லஞ்ச ஊழல் வழக்கு: நான்கு போலீஸ்காரர்கள் பிணையில் விடுவிப்பு

12 ஆயிரம் ரிங்கிட் லஞ்ச ஊழல் வழக்கு: நான்கு போலீஸ்காரர்கள் பிணையில் விடுவிப்பு

நோயுடன் போராடும் காமன்வெல்த் நடைபந்தய நாயகன் ஜி.சரவணனுக்கு அமைச்சு நிதியுதவி

நோயுடன் போராடும் காமன்வெல்த் நடைபந்தய நாயகன் ஜி.சரவணனுக்கு அமைச்சு நிதியுதவி

கிளந்தானில் 2 மாணவிகள் மீது கார் மோதி விபத்து - ஆசிரியருக்கு 2 நாட்கள் தடுப்பு காவல்

கிளந்தானில் 2 மாணவிகள் மீது கார் மோதி விபத்து - ஆசிரியருக்கு 2 நாட்கள் தடுப்பு காவல்

லஹாட் டத்துவில் காட்டுயானை தாக்கியதில் 69 வயது முதியவர் பலி | Thisaigal News