Oct 12, 2026
Thisaigal NewsYouTube

கொண்டினெண்டல் டயர் தொழிற்சாலை மூடப்படுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கொண்டினெண்டல் டயர் தொழிற்சாலை மூடப்படுகிறது

அலோர் ஸ்டார், ஏப்ரல்.28-

கெடா, அலோர் ஸ்டாரில் மிகப் பெரிய டயர் உற்பத்தி தொழிற்சாலையான கொண்டினெண்டல் , இவ்வாண்டு இறுதியில் மூடப்படுகிறது. இத்தொழிற்சாலை மூடப்படுவது மூலம் 950 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

வாடிக்கையாளர்கள் தேவைகளின் உருமாற்றத்திற்கு ஏற்ப கொண்டினெண்டல், தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கு இந்நடவடிடக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆசிய பசிபிக் நாடுகளுக்கு பிரதான சந்தையைக் கொண்டு இருந்த கொண்டினெண்டல், பயணிகள் வாகனம், சிறு ரக லோரிகள் முதலியவற்றுக்குப் பொருந்தக்கூடிய டயர்களை உற்பத்தி செய்து வந்தன.

மலேசியாவில் டயர் உற்பத்தி தொழிற்சாலை மூடப்படுவது இது இரண்டாவது நிறுவனமாகும்.

நாட்டில் டயர் உற்பத்திக்கு பிரசித்திப் பெற்ற நிறுவனமான அரை நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்ட குட்யேர், கடந்த ஆண்டு இறுதியில் ஷா ஆலாமில் உள்ள தனது தொழிற்சாலையை மூடியது. இதில் 550 தொழிலாளர்கள் வேலையை இழந்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →