மலேசியர்கள் தங்களின் மைகார்டு அடையாள அட்டையை மாற்றுவதற்கு, தேசியப் பதிவு துறை அலுவலகத்துக்குச் செல்லாமல் மைகோவ் (MyGOV) செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என இலக்கவியல் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த வசதி, கடந்த 10 ஆண்டுகளுக்குள் வழங்கப்பட்ட மைகார்டு அட்டைகளுக்கு மட்டுமே பொருந்தும். முகவரி, புகைப்படம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களில் எந்த மாற்றமும் செய்யாமல், ஏற்கெனவே உள்ள அட்டைக்குப் பதிலாகப் புதிய அட்டையைப் பெறுவதற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
இதற்கு முதலில் மைகோவ் செயலியைப் பதிவிறக்கம் செய்து, மைடிஜிட்டல் ஐடி மூலம் உள்நுழைய வேண்டும். பின்னர், செயலியில் உள்ள “டிஜிட்டல் ஐடெண்டிடி” பகுதியைத் தேர்ந்தெடுத்து, “ஐடெண்டிடி கார்ட்” என்பதை அழுத்தி, “பெங்கந்தியான் மைகாட்” என்ற தெரிவு மூலம் விண்ணப்பத்தைத் தொடரலாம் என்று இலக்கவியல் அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.








