சிலாங்கூர், தஞ்சோங் காராங், செக்கிஞ்சான் பகுதியிலிருந்து பகாங், பெந்தோங், கெந்திங் ஹைலண்ட்ஸ் மலைத்தொடரைப் பார்க்க முடியும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தக் காட்சிகள் உண்மையானவையா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டவையா என திரேட்ஸ் தளப் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த சில பயனர்கள், மழைக்குப் பிறகு வானம் தெளிவாக இருக்கும் காலைப் பொழுதில், குறிப்பாக தஞ்சோங் காராங் அருகிலுள்ள நெல் வயல் பகுதியிலிருந்து கெந்திங் ஹைலெண்ட்ஸ் மலைத்தொடரைப் பார்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரவு நேரங்களில் கெந்திங் ஹைலெண்ட்ஸ் பகுதியில் ஒளிரும் விளக்குகளையும் காண முடியும் எனப் பயனர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.








