மலாக்கா, நவம்பர்.08-
மலாக்காவில், கலர் பென்சிலைத் தொலைத்ததற்காக, 8 வயது வளர்ப்பு மகனை, உடல் ரீதியாகத் துன்புறுத்தியதாக நம்பப்படும் தம்பதி மீது, நேற்று ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
என்றாலும், 27 வயதான பாட்ருல் அமீன் யாஸிட்டும், 24 வயதான நூர் அமீஷா சயிமும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.
கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி, அச்சிறுவனின் விரலில் இருந்த தீக் காயத்தையு , அவரது உடலில் ஏற்கனவே இருந்த மற்றொரு காயத்தையும் கவனித்த அவரது உறவினர், உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த புதன்கிழமை போலீசார் அந்தத் தம்பதியைக் கைது செய்தனர்.
அச்சிறுவனை Lighter-ஆல் சுட்டும், சுடும் நீரை காலில் ஊற்றியும் துன்புறுத்தியதாக அத்தம்பதி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.








