புத்ராஜெயா, செப்டம்பர்.18-
ஜோகூர் பாருவிலுள்ள 3 உடம்பிப் பிடி மையங்களில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடிச் சோதனையில் 54 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமை மாலை 6 மணியளவில், 3 மையங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கைது செய்யப்பட்ட 54 பேரில், 43 பேர் பெண்கள் என்றும், அவர்களில் தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மார், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் மாநில குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இப்பெண்களை நிர்வகித்து வந்த 3 உள்ளூர் ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாகவும் ஸாகாரியா குறிப்பிட்டுள்ளார்.
குடிநுழைவுச் சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963 இன் கீழ் அவர்களின் மீது குற்றம் சுமத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








