போலீஸ்படை துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ அயோப் கான் மைடின் பிட்சை - யை வீழ்த்துவதற்கு சதி திட்டம் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்வதற்கு உள்துரை அமைச்சு விசாரணை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லெஸ் சந்தியாகொ வலியுறுத்தியுள்ளார்.
கோலாலம்பூர், டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் நோர் டெல்ஹான் யஹாயா உட்பட தம்மையும் வீழ்த்துவதற்கு சில குறிப்பிட்ட தரப்பினர் முயற்சிப்பதாக அயோப் கான் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்வதற்கு போலீஸ்படைக்கு அப்பாற்பட்ட நிலையில் தனியொரு குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும் என்று சார்லெஸ் சந்தியாகோ கேட்டு கொண்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை குடியானவர்கள் வாரிய கட்டிடத்தில் நடைபெற்ற நேர்மை தினம் மீதான சிறப்பு நேர்காணலில் தம்மீது அவதூறு தன்மையில் சில குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகவும் அந்த குற்றச்சாட்டுகளை குறித்து விசாரணை செய்யப்படுவதை தாம் வரவேற்பதாகவும் அயோப் கான் கூறியிருந்தார்.
தம்மீது உள்ள நம்பகத்தன்மையையும் நேர்மையையும் கீழிருப்பு செய்வதற்காக சில தரப்பினர் இத்தகைய அவதூறு தன்மையிலான குற்றச்சாட்டுகளை கூறிவருவதாக குறிபிட்ட அயோப் கான் எந்தவொரு விசாரணைக்கும் தாம் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.








