முன்னாள் வீடமைப்பு, உள்ளாட்சி மன்ற அமைச்சர் சுரைடா கமாருடின், தனது அவதூறு வழக்கை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், அதில் ஒரு பகுதியாக நடப்பு உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
இன்று காலை நீதிமன்ற விசாரணையின் போது கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இந்த சமரசத்தைப் பதிவு செய்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டில், கிளந்தான் அரசாங்கம் தாபோங் அமானா தோக் கெனாலி சம்பந்தமாக சுரைடா முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சைஃபுடின் சிவில் நடவடிக்கையை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
இன்று காலை தொடர்பு கொண்டபோது, சமரசத்தின் ஒரு பகுதியாக அவர் மன்னிப்பு கேட்டதையும் தமது குற்றச்சாட்டுகளை சுரைடா மீட்டுக் கொண்டதையும் சைபுதீனின் வழக்கறிஞர் நவ்ப்ரீட் சிங் Sஉறுதிப்படுத்தினார்.







