தற்பொழுது நிலவிவரும் கடுமையான வெப்ப உஷ்ணநிலை தாக்குதலால், பகாங் மாநிலத்தின் பெக்கான் பகுதியில் உள்ள சதுப்பு நில பகுதியில் தீ ஏற்பட்டுள்ளது .
கடந்த சனிக்கிழமை முதல் தீ பற்றி எரிய தொடங்கிய அந்தச் சதுப்பு நில பகுதியின் தீயைக் கட்டம் கட்டமாக தீயணைப்பு வீரர்கள் அணைத்து கொண்டு வருவதாக பெராமு தீயணைப்பு மற்றும் மீட்பு படைத் தலைவர் வான் ஷம்சூல் எஃபென்டி வான் மாமூட் தெரிவித்தார்.
ஒவ்வொரு முறையும் வெப்ப நிலை உயர்வு காணும் பொழுது இந்தப் பகுதியில் தீ ஏற்படுவது வழக்கமாக இருந்த போதும், அதிகமான வெப்பநிலையால் அந்தப் பகுதியின் மற்ற பகுதியில் தீ ஏற்படுவதற்கான சாத்தியங்களைத் தீயணைப்பு வீரர்கள் கண்டுள்ளனர் என அவர் மேலும் விளக்கினார்.








