சட்டங்களை மீறும் முதலாளிகளின் பெயர்கள் கறுப்பு பட்டியலில் இடப்படும்- அமைச்சர் சிவகுமார் நினைவுறுத்து.
வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் சரியான முறையில் வகுக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களைக் கடைப்பிடிப்பதில் கவனம் கொள்ள வேண்டும். மனித வள அமைச்சு மற்றும் உள்துறை அமைச்சு இணைந்து இனி அதிகமான வெளிநாட்டவர்கள் அதிகமாக பணியாற்றும் இடங்களைத் துல்லியமாக கவனிக்கும் என மனித வள அமைச்சர் வி சிவகுமார் கூறினார்.
வெளிநாட்டு தொழிலாளிகளை வன்மாக நடத்துவது, அவர்களுக்கு முறையான சம்பளப் பணம் வழங்காது ஏமாற்றுவது, வேலை இல்லாமல் திண்டாட செய்வது, அவர்களுக்காக தங்கும்விடுதி ஏற்பாடு செய்யாது, மனித வள அமைச்சு வகுத்துள்ள சட்டதிட்டங்களை மீறும் முதலாளிகளின் பெயர்கள் கறுப்பு பட்டியலில் இடம் பெறுவதோடு அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதால் முதலாளிகள் வெளிநாட்டு தொழிலாளிகள் சட்டத்தை மீற வேண்டாம் என சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.








