Sep 26, 2026
Thisaigal NewsYouTube
"அமினுதீனுக்கு இல்லை ; ஒற்றுமை அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு உண்டு" - நெகிரி செம்பிலான் அம்னோ முடிவு
தற்போதைய செய்திகள்

"அமினுதீனுக்கு இல்லை ; ஒற்றுமை அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு உண்டு" - நெகிரி செம்பிலான் அம்னோ முடிவு

Share:

நெகிரி செம்பிலானில் மந்திரி பெசார் அமினுதீன் ஹருண் மீது நம்பிக்கையின்றி, தங்களது ஆதரவைத் திரும்பப் பெற்றிருந்தாலும் கூட, ஒற்றுமை அரசாங்கத்திற்கு தனது ஆதரவை தொடர்ந்து வழங்கவுள்ளதாக அம்மாநில அம்னோ கட்சி தெரிவித்துள்ளது.

நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் ஜலாலுடீன் அலியாஸ், அமினுதீன்க்கு தங்களது ஆதரவை திரும்பப் பெற்றதற்கான காரணங்களை விளக்கியுள்ளதாகவும், அந்த முடிவை கட்சி மதிப்பதாகவும் மாநிலப் பொதுச்செயலாளர் அஸ்ரப் வஜ்டி டூசுகி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், மாநிலத்தின் நலனையும் அரசியல் நிலைத்தன்மையையும் கருத்தில் கொண்டு, நெகிரி செம்பிலானில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு அம்னோ தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நெகிரி செம்பிலான் ஆட்சியாளரான சமஸ்தானபதியை நீக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் சர்ச்சை தொடர்பாக, அம்னோவைச் சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்களும் கடந்த திங்கள்கிழமை, அமினுதீன்க்கு தாங்கள் வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News