Feb 19, 2026
Thisaigal NewsYouTube
சட்டப்பூர்வமாக நடத்தப்படும் இஸ்லாமிய பிரச்சாரங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தாது: அன்வார் விளக்கம்
தற்போதைய செய்திகள்

சட்டப்பூர்வமாக நடத்தப்படும் இஸ்லாமிய பிரச்சாரங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தாது: அன்வார் விளக்கம்

Share:

புத்ராஜெயா, பிப்ரவரி.19-

சட்டப்பூர்வமாக நடத்தப்படும் இஸ்லாமிய பிரச்சாரங்களையோ அல்லது தக்வா செயல்பாடுகளையோ அரசாங்கம் ஒரு போதும் தடுக்காது என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தாம் இதற்கு முன்பு அது போன்ற செயல்களில் ஈடுபட்ட போது, விதிமுறைகளுக்கு இணங்கியதாக இன்று உள்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இஹ்யா ரமலான் நிகழ்வில் கலந்து கொண்ட அன்வார் தெரிவித்துள்ளார்.

பாதசாரிகளின் போக்குவரத்தைப் பாதிக்காத வகையில், இதற்கு முன்பு, தான் தக்வா செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இந்து வழிபாட்டுத் தலங்களையும், மசூதிகளையும் கட்டுவதற்கு இதே கொள்கை பொருந்தும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். அதுவே அரசாங்கத்தின் கோரிக்கை என்று கூறியுள்ள அன்வார், இந்து வழிபாட்டுத் தலங்களைப் போல சட்டவிதிமுறைகளின்படி கட்டி, விருப்பப்படி வழிபடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, எங்கு வேண்டுமானாலும் மசூதிகளை நிறுவ அரசாங்கம் அனுமதி வழங்குவதாக சில தரப்பினர் கூறுவதாகத் தெரிவித்த அன்வார், இதற்கு முன்பு ஒரு முறை, பேராக் மாநிலத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மசூதி ஒன்று இடிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.

யாயாசன் சிலாங்கூர் கட்டிடத்திற்கு வெளியே ஜாலான் புக்கிட் பிந்தாங்கில், பல்லின மதமாற்ற முஸ்லிம்கள் குழுவால் அமைக்கப்பட்டிருந்த கடை ஒன்றை அகற்றுவதில், கடுமையாக நடந்து கொண்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை கோலாலம்பூர் மாநகர் மன்றமான (DBKL) மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அன்வாரின் மேற்கண்ட விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.

பாதசாரி நடைபாதையில் கூடாரம் அமைப்பது விதிமுறைகளை மீறுவதாகவும், பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக பொது இடங்கள் தடையின்றி இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிபிகேஎல் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News