Apr 15, 2026
Thisaigal NewsYouTube
பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

பண்டிகைக் கால உதவித் தொகை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

நாளை முதல் சாரா நிதியுதவி வழங்கப்பட உள்ளதாலும், அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதாலும் பொதுமக்கள் ஆன்லைன் பணப் பரிமாற்றங்களின் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் கேட்டுக் கொண்டுள்ளார். நிதியுதவியையும் பண்டிகைக் காலச் செலவுகளுக்காகப் பொதுமக்கள் பணத்தை எடுக்கும் இந்தச் சூழலையும் சாதகமாக்கி, மோசடி கும்பல் வலைவீச வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

குறுஞ்செய்திகளில் வரும் எந்தவோர் இணைய இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ குறுஞ்செய்திகளில் அத்தகைய இணைப்புகள் இருக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ஒரு வேளை பணத்தை இழந்தால், உடனடியாக 24 மணி நேரமும் செயல்படும் 997 என்ற தேசிய மோசடி பதில் மையமான NSRC உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News