Oct 18, 2026
Thisaigal NewsYouTube

வழிப்பறி கொள்ளையனை போலீஸ் தேடுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வழிப்பறி கொள்ளையனை போலீஸ் தேடுகிறது

ஷா ஆலம், அக்டோபர் 01-

கடந்த சனிக்கிழமை, ஷா ஆலாம், செட்டியா ஆலம் - மில் கார் விற்பனையாளர் ஒருவரின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்ட வழிப்பறி கொள்ளையன் ஒருவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் மாலை 6.14 மணியளவில் 29 வயதுடைய நபரிடமிருந்து போலீசார் புகார் பெற்று இருப்பதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது இக்பால் இப்ராகிம் தெரிவித்தார்.

Yamaha 135 LC ரக மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன், ஒரு Mercedes Benz ரக காரை வேண்டுமென்றே மோதியுள்ளார். காரின், உரிமையாளர், காரில் ஏற்பட்ட சேதத்தைப் பார்ப்பபதற்காக காரை நிறுத்திவிட்டு, கீழே இறங்கியுள்ளார்.

அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த கொள்ளையன், மோட்டார் சைக்கிளில் இருந்துவாறு மின்னல் வேகத்தில் அந்த நபரின் கழுத்திலிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றதாக ஏசிபி முகமது இக்பால் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் அந்த கார் உரிமையாளர் எவ்வித காயத்திற்கும் ஆளாகவில்லை என்று அவர் மேலும் கூறினார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →