பட்டர்வொர்த், நவம்பர்.15-
பட்டர்வொர்த், சுங்கை டூவாவில், ஒரு கிராமத்தில் ஒரு வீட்டின் கழிப்பறையில் தொப்புள்கொடி அவிழ்க்கப்படாத பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அக்குழந்தை மற்றொரு இடத்தில் பிரசவிக்கப்பட்டு, இங்கு கொண்டு வந்து கைவிடப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில் கடந்த வியாழக்கிழமை மீட்கப்பட்ட அந்தக் குழந்தை, மருத்துவப் பரிசோதனைக்காக செபெராங் ஜெயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.
குழந்தை கைவிடப்பட்ட கழிப்பறைப் பகுதியில் எந்தவொரு தடயமும் கண்டெக்கப்படவில்லை என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸி இஸ்மாயில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட குழந்தையின் தாயாரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








