Oct 16, 2026
Thisaigal NewsYouTube

குற்றவாளி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குற்றவாளி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்

செலயங், டிச.4-

செலயங் ஹெயிட்ஸ் பகுதியில் வசிக்கும் ஒரு பெண், தனது காரின் சக்கரங்களும் ரிம்களும் இருமுறை திருடப்பட்டதால் கடும் சினத்திற்கு ஆளாகியுள்ளார். கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி அன்று நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை அவர் தற்போது பகிர்ந்துள்ளார். இந்த காட்சிகளில், ஒரு சிவப்பு நிற T-SHIRT அணிந்த நபர் அப்பெண்ணின் காரின் அருகில் ஒரு பெரோடுவ கெனரி காரை நிறுத்திவிட்டு, சக்கரங்களை திருடுவது தெளிவாகத் தெரிகிறது.

மிகவும் சாதுரியமாக, காரின் பின் கதவைத் திறந்து மக்களின் கவனத்தை திசை திருப்பியதால், அவர் காரை சரிசெய்கிறார் என்று மற்றவர்கள் நினைக்கலாம். தொடர்ந்து, பின் கதவைத் திறந்து, ஓட்டுநர் இருக்கையை கீழே இறக்கி, காரின் SPORT RIM இன் நட்டைத் திறக்கத் தொடங்கினார். "இந்த நட்டுகள் மிகவும் பாதுகாப்பானவை, எனவே அவற்றைத் திறக்க சிறப்பு கருவிகள் தேவைப்படும். அவர் முன்கூட்டியே திட்டமிட்டு அக்கருவியை எடுத்து வந்திருக்கலாம், என்று பாதிக்கப்பட்ட பெண் தனது டிக் டாக் வீடியோவில் கூறியுள்ளார்.

காலை வேளையில், மக்கள் வேலைக்குச் செல்லும் நேரத்தில் இந்த இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளதாகவும், குற்றவாளி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அப்பெண் கூறுகிறார். இது தனக்கு இரண்டாவது முறையாக நடக்கிறது எனவும் இதைச் செய்தது அதே நபர் தான் என்று தனக்குத் தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்விவகாரம் குறித்து தகவல் உள்ளவர்கள் யாரேனும் இருந்தால், போலீஸிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →