கோல கிராய், ஆகஸ்ட்.05-
மூதாட்டி ஒருவர் வீட்டிற்குள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த சில தினங்களாக அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த அண்டை வீட்டுக்காரர்கள், பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டில் ஏற்பட்ட துர்நாற்றம் குறித்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.
கிளந்தான், கோல கிராய், ஶ்ரீ கூச்சியில் உள்ள அந்த வீட்டில், தீயணைப்புப் படையினரின் உதவியுடன் போலீசார் சோதனையிட்டதில் 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் இறந்த நிலையில் உடல் அழுகிக் கிடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.








