கோலாலம்பூர், செப்டம்பர்.11
கம்போங் சுங்கை பாருவில் இன்று குடியிருப்பாளர்கள் வெளியேற்ற நடவடிக்கையின் போது, டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் சுஸில்மி அஃபெண்டி சுலைமான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, உள்துறை அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒரு இழிவான, நாகரீகமற்ற, ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
இறையாண்மை மிக்க நாடான மலேசியாவில், மக்கள் தங்கள் உரிமைகளை அமைதியாக ஒன்று கூடி கேட்பதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்றாலும், அதனை யாரும் துஷ்பிரயோகம் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இத்தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் துறைக்குத் தான் உத்தரவிட்டுள்ளதாகவும் சைஃபுடின் நசுத்தியோன் தெரிவித்துள்ளார்.








