May 4, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் நிதி அமைச்சரின் நான்கு பிள்ளைகளைத் தேடுகிறது எஸ்பிஆர்எம்
தற்போதைய செய்திகள்

முன்னாள் நிதி அமைச்சரின் நான்கு பிள்ளைகளைத் தேடுகிறது எஸ்பிஆர்எம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.27-

விசாரணைக்கு உதவும் பொருட்டு முன்னாள் நிதி அமைச்சர் துன் டாயிம் ஜைனுதீனின் நான்கு பிள்ளைகளைத் தேடி வருவதாகவும், அவர்களைப் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் முன்வந்து உதவுமாறும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அஸ்னிடா அப்துல் அப்துல் டாயிம், முஹமட் வீரா டானி அப்துல் டாயிம், முஹமட் அமீர் ஸைனுடின் டாயிம், முஹமட் அமின் ஸைனுடின் டாயிம் ஆகியோரே தேடப்பட்டு வரும் துன் டாயிமின் பிள்ளைகள் ஆவர்.

அஸ்னிடா அப்துல் டாயிம் தொடர்பான தகவல்களுக்கு விசாரணை அதிகாரி முகமது டாயிம் முகமது அலியையும், முகமது வீரா டானி தொடர்பான தகவல்களுக்கு விசாரணை அதிகாரி அகமது அய்மான் ரம்லியையும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தேடப்பட்டு வரும் துன் டாயிமின் நான்கு பிள்ளைகள் பற்றிய புகைப்படங்களையும் எஸ்பிஆர்எம் இன்று வெளியிட்டுள்ளது.

Related News