Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மீனவர்களை காயப்படுத்தியது புலி அல்ல
தற்போதைய செய்திகள்

மீனவர்களை காயப்படுத்தியது புலி அல்ல

Share:

ஈப்போ, சுங்ஙாய் சிபுட், தாமான் டோவென்பி அருகிலுள்ள செம்பனை தோட்டத்தில் மீனவர்களை துன்புறுத்தியதாக கூறப்பட்ட வனவிலங்கு புலி அல்ல என்று வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை தெரிவித்துள்ளது.

கண்டறியப்பட்ட கால்தடங்களின் அடையாளத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விலங்கு காட்டுப்பன்றியுடையது என்று தெரியவந்ததாக பேரா வனவிலங்கு பாதுகாப்பு துறை தலைவர் யூசோஃப் ஷாரிஃப் கூறினார்.

வனவிலங்கை பிடிப்பதற்கு பொறிகள் எதுவும் நிறுவப்படாமல் இருந்தாலும் இதுவரையில் எதிர்பாராத சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக யூசோஃப் ஷாரிஃப் விவரித்தார்.

செம்பனை தோட்டத்தில் அருகில் பாதுகாக்கப்பட்டு வரும் குனோங் கொர்பு- வனவிலங்குகள் செல்லும் பாதையாக இருப்பதால் இக்கண்காணிப்பு தொடர்வதாக அவர் தெரிவித்தார்.

Related News