Jan 19, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டமா?
தற்போதைய செய்திகள்

ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டமா?

Share:

பிரதமர் அன்வார் கடும் எச்சரிக்கை

தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு முயற்சிப்பவர்களைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

இடம் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கும் கீழறுப்பு நடவடிக்கை வேண்டாம். சகித்துக்கொள்ள மாட்டேன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நினைவுறுத்தினார்.

ஆட்சி அமைப்பதற்குத் தங்களிடம் போதுமான எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக கூறி, வதந்திகளைப் பரப்பி வரும் நபர்கள் தொடர்பில் அன்வார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தமக்கு உண்மையிலேயே ஆதரவு இல்லையென்றால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்று பிரதமர் மீண்டும் நினைவுறுத்தினார். சீரான அரசியல் பயணத்தில் கேடு விளைவிக்க வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பாரிசான் நேஷனலைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் பதவி விலகி, இடைத்தேர்தலின் வாயிலாக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலுக்கு வெற்றியை ஏற்படுத்தி, புதிய ஆட்சிக்கு வழிவிடுவதற்கு சதி முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுவது தொடர்பில் அன்வார் கருத்துரைத்தார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்