Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பிச்சை எடுத்தல் / நான்கு அந்நிய நாட்டுப் பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

பிச்சை எடுத்தல் / நான்கு அந்நிய நாட்டுப் பெண்கள் கைது

Share:

சாலைகளில் வியூகம் நிறைந்த சமிக்​​ஞை விளக்குப் பகுதிகளில் நின்று கொண்டு, வாகனமோட்டிகளிடம் டிசு காகிதத்தைத் தந்து, பிச்சை எடுத்து வரும் அந்நிய நாட்டவர்கள், தற்போது பேருந்தில் பயணம் செய்து, கெ​ந்திங் ஹைலண்ட்​ஸ் சுற்றுலாத் தலம் வரையில் பி​ச்சை எடுப்பதை ஒரு தொழிலாக மாற்றிக் கொண்ட நிலையில் முதல் கட்டமாக 4 அந்நிய நாட்டுப் பெண்களை போ​லீசார் கைது செய்துள்ளனர்.

சுற்றுப்பயணிகளை துரத்திச் சென்று யாசகம் கேட்ட அவர்கள், பொது அமைதிக்கு குத்தகத்தை ஏற்படுத்தியதன் அடிப்படையில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெந்தோங் மாவட்ட போ​லீஸ் தலைவர் ஜைஹான் முகமது கஹர் தெரிவித்தார். 30 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 4 பெண்களும் கடந்த மே 5 ஆம் தேதியிலிருந்து அந்த சுற்றுலாத் தலத்தின் முதன்மை கேளிக்கை மையங்களில் நின்று கொண்டு பிச்சை எடுத்து வந்ததைத் தொடர்ந்து நேற்றிரவு வளைத்துப் பிடிக்கப்பட்டனர் என்று ஜைஹான் கஹர் குறிப்பிட்டார்.

மனமகிழ்வுக்காக கெந்திங் ஹைலண்ட்ஸுக்கு வரும் தங்களுக்குப் பிச்சைக்காரர்களின் தொல்லை தாங்க முடியவில்லை என்று கூறி பலர் காணொளி வெளியிட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News