Sep 27, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் 100 கோடி ரிங்கிட்  ஆவண  மோசடி கும்பல் பிடிபட்டது: சோதனை வேட்டையில் 9 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் 100 கோடி ரிங்கிட் ஆவண மோசடி கும்பல் பிடிபட்டது: சோதனை வேட்டையில் 9 பேர் கைது

Share:

சுமார் 6 மாத கால ரகசியப் புலனாய்விற்குப் பிறகு, கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கோலாலம்பூரின் ஆறு இடங்களில் குடிநுழைவுத் துறையினர் தீவிர சோதனைகளை நடத்தினர். இந்தச் சோதனைகளில் குடிநுழைவுத்துறை போலி ஆணவங்களை தயாரித்தல் மற்றும் மனித கடத்தல் தொடர்பில் 26 முதல் 61 வயதுக்குட்பட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 3 நேபாளிகள், 3 இந்தியர்கள், ஒரு வங்கதேசத்தவர் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் தெரிவித்தார்.

இந்த மோசடிக் கும்பல் நடவடிக்கையில் ஒரு மலேசிய ஆடவர் மற்றும் நிரந்தரக் குடியுரிமை பெற்ற வியட்நாமிய பெண் ஆகியோர் நிறுவன இயக்குநர்களாகச் செயல்பட்டுள்ளனர். இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்ட 43 வயது நேபாளியையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர் ஏற்கனவே 2016-ல் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவால் தடுத்து வைக்கப்பட்டவர் என்று டத்தோ ஜக்காரியா ஷாபான் குறிப்பிட்டார்.

2019 முதல் இயங்கி வரும் இந்தக் கும்பல், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான முகவர்கள் என்று கூறி முதலாளிகளை ஏமாற்றியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று இன்று புத்ரஜெயா, குடிநுழைவுத்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஜக்காரியா ஷாபான் தெரிவித்தார்.

• ஒவ்வொரு தொழிலாளிக்கும் 5,000 முதல் 6,000 ரிங்கிட் வரை வசூலித்துவிட்டு, போலியான ஆவணங்கள் மற்றும் அனுமதிச் சீட்டுகளான இ-பாஸ் அட்டைகளை வழங்கியுள்ளனர்.

• 7 ஆண்டுகளில் இவர்கள் சுமார் 100 மில்லியன் ரிங்கிட் வரை சம்பாதித்திருக்கலாம் எனத் தெரிகிறது டத்தோ ஜக்காரியா ஷாபான் குறிப்பிட்டார்.

சோதனையின் போது 111 வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகள், 10 மடிக்கணினிகள், 6 கைபேசிகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. "வெளிநாட்டுத் தொழிலாளர் விண்ணப்பங்களுக்குத் குடிநுழைவுத் துறை எந்த முகவர்களையும் நியமிக்கவில்லை. எனவே, முதலாளிகள் அதிகாரப்பூர்வமற்ற நபர்களை அணுகி ஏமாற வேண்டாம்" என்று டத்தோ ஜக்காரியா ஷாபான் வலியுறுத்தினார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்