கோலாலம்பூரில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வீடமைப்புத்திட்டங்களிலும் வாங்கத் தக்க வீடுகள் அல்லது பிபிஆர் வீடமைப்புத்திட்டடங்கள் கட்டாயமாக்கப்படும் கொள்கைக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுத்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைநகரில் மக்கள் வாங்கத் தக்க வீடுகளை அதிகளவில் நிர்மாணிப்பதற்கு வகுக்கப்பட்ட இலக்கு, இன்னும் நிறைவேறவில்லை என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். அதிக விலைகொடுத்து வீடுகளை வாங்க முடியாத நிலையில் உள்ள மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வாங்கத் தக்க வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு அதன் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூரில் ஆண்டொன்றுக்கு வாங்கத் தக்க அல்லது பிபிஆர் குடியிருப்புகளுக்கு வீடு கேட்டு சராசரி மூவாயிரம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆனால், கோலாலம்பூர் மாநகர் மன்றம் 300 வீடுகளை மட்டுமே வழங்கும் ஆற்றலை கொண்டு இருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


