Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சடலங்களை அடையாளம் காண்பதில் புதிய சிக்கல்
தற்போதைய செய்திகள்

சடலங்களை அடையாளம் காண்பதில் புதிய சிக்கல்

Share:

எல்மினா விமான விபத்தில் பெரும்பாலான உடல்கள் சிதைந்து விட்டதால் அவ​ற்றை அடையாளம் காண்பதில் உடற்கூறு தடயவியல் நிபுணர்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இதுவரையில் 200 அவயங்கள் ​மீட்கப்பட்டுள்ளன.எனினும் சடலங்களை அடையாளம் காணும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக போ​லீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் உசேன் தெரிவித்துள்ளார். எனினும் சடலங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் வரும் திட்கட்கிழமை முடிவுறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கால தாமத்தினால் சடலம் எந்த நேரத்திலும் ஒப்படைக்கலாம் என்று எதிர்பார்த்து, குடும்ப வாரிசுதாரர்கள் சவக்கிடங்கில் காத்திருக்க வேண்டாம் என்று ரஸாருதீன் கேட்டுக்கொண்டார்.

Related News