Oct 13, 2026
Thisaigal NewsYouTube

விளையாட்டாகக் கூறியது, வினையானது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விளையாட்டாகக் கூறியது, வினையானது

பாயான் லெப்பாஸ், மார்ச்.13-

பினாங்கு, பாயான் லெப்பாஸ் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சீனாவிற்கு புறப்பட ஆயத்தமான முதியவர் ஒருவரும், அவரின் நண்பரும், நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அமர்ந்திருந்த வேளையில் தனது நண்பரின் பயணப் பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக விளையாட்டாக அந்த முதியவர் கூறியது, அவருக்கே வினையானது.

நண்பரின் பயணப் பெட்டியைச் சோதனை செய்யும் வகையில் வகையில் 64 வயது முதியவரும், அவரின் 60 வயது நண்பரும் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டதாக பினாங்கு, பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சஸாலி அடாம் தெரிவித்தார்.

பின்னர் அந்த இரு நபர்களின் பயணப் பெட்டிகளைச் சோதனையிட்ட போலீசார், அவற்றில் வெடிகுண்டுயில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

தங்களை விடுவித்து விடுவார்கள் என்று காத்திருந்த அவ்விரு நண்பர்களும், சீனாவிற்கு செல்ல முடியாமல், விசாரணைக்கு ஏதுவாக மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டனர் என்று ஏசிபி சஸாலி குறிப்பிட்டார்.

சீனாவிற்குச் செல்லும் பயண மகிழ்ச்சியில் அந்த முதியவர் செய்த குறும்புத்தனத்தால் இருவரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டு, குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி சஸாலி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்