நெகிரி செம்பிலான் மாநிலம், லுக்குட் பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு மாணவர் ஒருவர் உயரமான இடத்திலிருந்து விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
21 வயதுடைய அந்த மாணவர், லுக்குட் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தொழிற்பயிற்சி மேற்கொண்டு வந்ததாக போர்ட் டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் அஃபிக் அட்னான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை 6.05 மணியளவில் உணவகம் ஒன்றின் பின்புறத்தில் அம்மாணவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனையில், உயரமான இடத்திலிருந்து விழுந்ததால் தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயங்களே உயிரிழப்புக்குக் காரணம் என்பது தெரிய வந்ததாக அஹ்மாட் அஃபிக் அட்னான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவத்தில் குற்றச்செயல் தொடர்பான எந்தவோர் அறிகுறியும் கண்டறியப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.








