வேஸ் செயலிக்கு மாற்றாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமால் பரிந்துரைக்கப்பட்ட தூஜு வழிகாட்டிச் செயலியின் வழிசெலுத்தும் வசதி, தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் காரணமாகத் தற்காலிகமாக முடங்கியுள்ளது.
இது குறித்து மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, கண்காணிப்புக் கேமரா காட்சிகள் உள்ளிட்ட பிற வசதிகள் தொடர்ந்து செயல்படும் நிலையில், வழிசெலுத்தும் வசதி மீண்டும் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே, அரசாங்கப் பணியின்போது அரசு ஊழியர்கள் வேஸ் செயலியைப் பயன்படுத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது.
தரவுப் பாதுகாப்பு மற்றும் இஸ்ரேலுடனான தொடர்புகள் குறித்த கவலைகளே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளன.
எனினும், இந்தக் கட்டுப்பாடு அரசாங்கப் பணிகளை மேற்கொள்ளும் அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தேசிய இணையப் பாதுகாப்பு முகமை தெளிவுபடுத்தியுள்ளது.








