May 22, 2026
Thisaigal NewsYouTube
ஐவர் மேலும் நான்கு நாள் ரிமாண்டி‌ல்
தற்போதைய செய்திகள்

ஐவர் மேலும் நான்கு நாள் ரிமாண்டி‌ல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி 25 -

சிலாங்கூர் ரில் கடந்த செவ்வாய்கிழமை உணவு விநியோகிப்பாளரை மோதி தள்ளிவிட்டு தப்பிக்க முற்பட்ட காரோட்டி ஒருவரை பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மேலும் நான்கு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைக்கு உதவும் வகையில் 22 முதல் 52 வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் பிப்ரவரி 29 ஆம் தேதி வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி முகமாட் ஹாசான் தெரிவித்தார்.

புரோத்தோன் சாகா வாகனத்தில் வந்த பாதிக்கப்பட்டவரை பொதுமக்கள் செமென்ஞி 2 தாமான் பெலாங்கி வரையில் துரத்தி சென்று அடித்திருப்பதாக முகமட் சாயிட் மேலும் விளக்கினார்.

Related News