Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது அன்வாரின் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது அன்வாரின் சந்திப்பு

Share:

கிளந்தான் முன்னாள் மந்திரி பெசாரும், பாஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான மறைந்த நிக் அப்துல் அ​ஸிஸின் புதல்வரை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்தது பல்வேறு ஆருடங்களை ஏற்படுத்தியுள்ளன. மலேசியர்களால் மிகவும் மதிக்கப்பட்டவரான ஆன்மிகவாதி, நிக் அஸினின் புதல்வர் நிக் ஒமார் நிக் அப்துல் அஸீஸ் மற்றும் அவரின் சகோதரரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நிக் முகமட் அப்டூவை நேற்று கிள​ந்தான் மாநிலத்திற்கான வருகையின் போது பிரதமர் அன்வார் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் அன்வாரின் துணைவியார் டாக்டர் வான் அஸிஸாவும் கலந்து கொண்டார்.

Related News