Sep 27, 2026
Thisaigal NewsYouTube
சம்பள குறைப்பை அமல்படுத்த அமைச்சரவை தயாராகிறது - அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

சம்பள குறைப்பை அமல்படுத்த அமைச்சரவை தயாராகிறது - அமைச்சர் தகவல்

Share:

மேற்காசிய போர் நெருக்கடி மேலும் தீவிரமானால், அமைச்சர்களின் சம்பளக் குறைப்பை அமல்படுத்த அமைச்சரவை தயாராக உள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளரும், தொடர்புத்துறை அமைச்சருமான ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட முறையில், பிரதமர் வழங்கும் எந்த உத்தரவையும் ஏற்கத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பதவியேற்ற நாளிலிருந்தே அமைச்சர்களின் சம்பளமானது குறைக்கப்பட்ட நிலையில் தான் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், இது பற்றி முன்பே அமைச்சரவை ஆலோசித்துள்ளதாகவும், பிரதமர் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நிச்சயமற்ற நிலை நீடித்தால், அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்