Oct 22, 2026
Thisaigal NewsYouTube

கைத்துப்பாக்கியை வைத்திருந்த தாய்லாந்து பிரஜை உட்பட 3 பேர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கைத்துப்பாக்கியை வைத்திருந்த தாய்லாந்து பிரஜை உட்பட 3 பேர்

ஜொகூர் பாரு, ஜூன் 27-

இரண்டு வாரங்களுக்கு முன்பு, வீட்டில் கைத்துப்பாக்கியை வைத்திருந்த குற்றத்திற்காக இரண்டு உள்ளூர் ஆண்கள் உட்பட ஒரு தாய்லாந்து பெண் ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

29 வயது சோ வீ ஹாங், 26 வயது சோ வீ ஹாங், 29 வயது மிஸ் லோர் மிகராத் ஆகியோர் நீதிபதி டத்தோ அகமட் கமால் அரிபின் இஸ்மாயில் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 14 ஆண்டுகள் சிறை மற்றும் ஆறு பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 34 ஆவது பிரிவின் கீழ் அம்மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த ஜூன் 14 ஆம் தேதி மாலை 3.45 மணியளவில் ஜொகூர் பாரு,வாடி ஹனா, ஜாலான் அலிமதில் உள்ள ஒரு வீட்டில் ரிவால்வர் கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக அம்மூவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஆசிரியர் மீதான தாக்குதலைச் சமூக ஊடகத்தில் நேரலை செய்த மாணவர்: சரவாக் பள்ளியில் போலிசார் தீவிர விசாரணை

ஆசிரியர் மீதான தாக்குதலைச் சமூக ஊடகத்தில் நேரலை செய்த மாணவர்: சரவாக் பள்ளியில் போலிசார் தீவிர விசாரணை

வேஸ்ஸுக்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்பட்ட தூஜூ செயலியில் வழிகாட்டிச் சேவை தற்காலிக முடக்கம்

வேஸ்ஸுக்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்பட்ட தூஜூ செயலியில் வழிகாட்டிச் சேவை தற்காலிக முடக்கம்

போர்டி டிக்சனில் உயரத்திலிருந்து விழுந்து கல்லூரி இறுதியாண்டு மாணவர் உயிரிழப்பு

போர்டி டிக்சனில் உயரத்திலிருந்து விழுந்து கல்லூரி இறுதியாண்டு மாணவர் உயிரிழப்பு

சரவாக் பள்ளியில் ஆசிரியர் மீதான தாக்குதல் சம்பவம்: பொறுப்புடன் கையாள அமைச்சர் அறிவுறுத்தல்

சரவாக் பள்ளியில் ஆசிரியர் மீதான தாக்குதல் சம்பவம்: பொறுப்புடன் கையாள அமைச்சர் அறிவுறுத்தல்

மலேசிய விமான நிலையங்களில் போதைப் பொருட்களைக் கண்டறியும் ஸ்கேனர்கள் இல்லை - உள்துறை அமைச்சர் தகவல்

மலேசிய விமான நிலையங்களில் போதைப் பொருட்களைக் கண்டறியும் ஸ்கேனர்கள் இல்லை - உள்துறை அமைச்சர் தகவல்

70 ஆண்டுகால காத்திருப்புக்கு தீர்வு: பிறை கம்போங் மானிஸ் மறுமேம்பாட்டுத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது

70 ஆண்டுகால காத்திருப்புக்கு தீர்வு: பிறை கம்போங் மானிஸ் மறுமேம்பாட்டுத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது