மலாக்கா, அக்டோபர்.22-
கிளேபாங் கடற்கரையில் முதலை ஒன்று காணப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து, அப்பகுதியில் யாரும் நீரில் இறங்கும் வேலைகளில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு மலாக்கா வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுவரை அங்கு முதலை இருப்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் கூட, தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதன் இயக்குநர் பெட்ரா சுலாய் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் முதலை காணப்பட்டாலும் கூட, பொதுமக்கள் யாரும் அதனை தொந்தரவு செய்யவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2023 ஆம் ஆண்டில் மீன்வளத் துறை மேற்கொண்ட இரண்டு டன் அளவிலான cockle வளர்ப்பு திட்டத்தின் விளைவாக, கடந்த வார தொடக்கத்திலிருந்து கிளேபாங் கடற்கரை cockle சேகரிப்புக்கான பிரபலமான இடமாக மாறியுள்ளது.