Oct 3, 2026
Thisaigal NewsYouTube

பாதுகாவலர் தாக்கப்பட்ட சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாதுகாவலர் தாக்கப்பட்ட சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது

கோலாலம்பூர், நவம்பர்.03-

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் 54 வயது பாதுகாவலர் தாக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு மாரடைப்பினால் மரணமுற்ற சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஹ்மாட் சுகார்னோ முகமட் ஸஹாரி தெரிவித்தார்.

கடந்த 13 ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் காயங்களுக்கு ஆளான பாதுகாவலர், சிகிச்சைக்குப் பின்னர் சில மணி நேரத்தில் ஏற்பட்ட மாரடைப்பில் உயிரிழந்தார். அந்த நபரைத் தாக்கிய ஆடம்பர அடுக்குமாடி வீட்டைச் சேர்ந்த 32 வயது நபர், கைது செய்யப்பட்டு, போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அந்த நபர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்படுவதற்கு தற்போது துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தின் உத்தரவுக்காகத் தாங்கள் காத்திருப்பதாக ஏசிபி அஹ்மாட் சுகார்னோ குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →