Mar 11, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் செயல்பட்டு வரும் பல சட்டவிரோத கிளினிக்குகள் - மலேசிய மருத்துவமனைக்குக் சங்கம் கவலை
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் செயல்பட்டு வரும் பல சட்டவிரோத கிளினிக்குகள் - மலேசிய மருத்துவமனைக்குக் சங்கம் கவலை

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.20-

கோலாலம்பூரில் செயல்பட்டு வரும் சில சட்டவிரோதக் கிளினிக்குகள் குறித்து மலேசிய மருத்துவ சங்கமான எம்எம்ஏ தொடர்ந்து தனது கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றது.

அது போன்ற கிளினிக்குகளில், முறையான தகுதிகள் அல்லது பதிவு இல்லாமல், தங்களை மருத்துவரைப் போல் காட்டிக் கொள்ளும் வெளிநாட்டினர், கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கி வருவதாகவும் எம்எம்ஏ தெரிவித்துள்ளது.

நோயாளிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை மேற்பார்வை குறித்து தொடர்ந்து தமது கவலைகளை எழுப்பி வருவதாக அதன் தலைவர் டத்தோ டாக்டர் திருநாவுக்கரசு ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும், தவறான நோயறிதல், பொருத்தமற்ற சிகிச்சை, பாதுகாப்பற்ற நடைமுறைகளால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் முறையற்ற முறையில் விநியோகிக்கப்படும் மருந்துகளுக்கு ஆளாக நேரிடும் அபாயம் நோயாளிகளுக்கு உள்ளது.

அதன் காரணமாகவே, மலேசியாவில் மருத்துவப் பயிற்சி என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மலேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட மற்றும் வருடாந்திர பயிற்சிச் சான்றிதழை வைத்திருக்கும் மருத்துவர்கள் மட்டுமே சட்டப்பூர்வமாகப் பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் திருநாவுக்கரசு ராஜூ நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News