Dec 5, 2025
Thisaigal NewsYouTube
பேருந்து வேகமாகச் சென்றதே 15 பேர் பலியானதற்கு முக்கியக் காரணமாகும்
தற்போதைய செய்திகள்

பேருந்து வேகமாகச் சென்றதே 15 பேர் பலியானதற்கு முக்கியக் காரணமாகும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.18-

கடந்த ஜுன் 9 ஆம் தேதி, பேராக், கெரிக்கில் நிகழ்ந்த தஞ்சோங் மாலிம் உப்சி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பேருந்து விபத்துக்கு முக்கியக் காரணம், அந்தப் பேருந்து படுவேகத்தில் சென்றுள்ளதாகப் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

15 பேர் பலியான அந்தச் சம்பவத்திற்குப் பேருந்தின் பிரேக் செயலிழந்து விட்டதாக அதன் ஓட்டுநர் கூறிய போதிலும் பேருந்தின் அனைத்து பிரேக்குகளும் செயலாக்கத்தில் இருந்துள்ளன என்று போக்குவரத்து அமைச்சின் சாலை போக்குவரத்துப் பாதுகாப்புச் சிறப்புப் பணிக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் அந்த பேருந்து சென்றதும் விபத்துக்கான மற்றொரு காரணமாகும். பேருந்தின் அத்தகைய வேகத்திற்கு, சாலை வளைவில் விபத்துக்குள்ளாவதற்கான சாத்தியம் அதிகமாக இருப்பதாக இன்று வெளியிடப்பட்ட பூர்வாங்க அறிக்கையில் அந்த சிறப்புப் பணிக்குழு தெரிவித்துள்ளது.

Related News