Oct 16, 2026
Thisaigal NewsYouTube

11 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு இன்று தொடங்கியது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
11 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு இன்று தொடங்கியது

கோலாலம்பூர், நவ.15-


11 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, இன்று காலையில் கோலாலம்பூர் மாநாட்டு மையமான கே.எல்.சி.சி.-யில் திகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

இன்று நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கி, 17 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு நடைபெறவிருக்கும் இந்த உச்சநிலை மாநாடு, உலகத் தமிழர்களிடையே பொருளாதார சிந்தனையை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகத் தமிழர் பொருளாதார மையமும், சென்னை வளர்ச்சிக்கழகமும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு, இன்று காலை 10 மணியளவில் எழுச்சிமிகுந்த ” நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் “தமிழ் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது.

உலகத் தமிழர் பொருளாதார அமைப்பின் தலைவர் தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பந்த் முன்னெடுப்பில் மாநாட்டின் ஒருகிணைப்புக்குழுத் தலைவரான தேசிய நில நிதிக்கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா. சகாதேவன் முன்னிலையில் தொடங்கிய மாநாட்டில் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளில் பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

உலகளாவிய நிலையில் உள்ள தமிழர்களிடையே வர்த்தகக் கட்டமைப்பையும், பொருளாதார மேம்படுட்டையும் வலுப்படுத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்துவது, அதற்கான வியூகத்தை வகுப்பது, செயல்திறனை மேம்படுத்திக்கொள்வது, கூட்டு ஒத்துழைப்பு கொள்வது ஆகிய நோக்கங்களுக்காக இந்த மாநாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வரவேற்புரையாற்றிய அமைப்பின் தலைவர் சம்பந்த் தமது உரையில் குறிப்பிட்டார்.

ஏற்பாட்டுக்குழுத் துணைத் தலைவரும், கல்வியலாளருமான டான்ஸ்ரீ டாக்டர் பி. மாரிமுத்து, பிகேஆர் கட்சியின் செந்தோசா சட்டமன்ற உறுப்னிர் டாக்டர் குணராஜ், டாக்டர் வி.ஜி. சந்தோஷம் உட்பட திரளான பேராளர்கள் கலந்து கொண்ட இந்த அனைத்துலக மாநாட்டில், மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக வெளிநாட்டு தமிழ் அமைப்புகளின் தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டதுடன், மாநாடு குறித்து ஒவ்வொருவரும் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

உலகத் தமிழர்களுக்கான பொருளாதார வளர்ச்சியை அலசி ராயும் மாநாடாக அமைவிருக்க்கும் இந்த 11 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றன

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →